விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மதிமுக குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

News image
வைகோ - கோப்புப்படம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 6:40 am

இணையதளச் செய்திப் பிரிவு

தொகுதிப் பங்கீடு தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மதிமுக குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக குழுவினர், திமுகவிடம் மாநிலங்களவை சீட் கேட்டுள்ளோம். கடந்த முறையைவிட கூடுதல் தொகுதி கேட்டுள்ளோம். தொகுதிகளை குறைத்துக்கொள்ளுமாறு திமுக கேட்கவில்லை.

பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும். எத்தனை தொகுதிகள் என்பதை பின்னர் தெரிவிக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டனர். கடந்த பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது.

ஆனால் வரும் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதிமுக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

வழக்கம்போல இந்த முறையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் முதலில் பேச்சு நடத்தப்பட்டது. தொடர்ந்து, திங்கள்கிழமை மனிதநேய மக்கள் கட்சி, மதிமுகவுடன் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழு திங்கள்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

summary

The MDMK group held talks with the DMK group led by T.R. Balu at Anna Arivalayam in Chennai today regarding seat sharing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.