/

ரூ. 52 ஆயிரம் சம்பளத்தில் தமிழக வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..! 

தமிழக அரசின் வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:36 am

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசின் வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 564

பணி: வனக்காவலர் 

காலியிடங்கள்: 465 + 99 (தோராயமாக)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வுக்கட்டணம்: ரூ.150 மற்றும் உரிய சேவைக்கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், உடற்தகுதி மற்றும்உடற்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஜூன் நான்காவது வாரம் நடைபெறும்.

தேர்வுக்கான பாடத்திட்டம் வனத்துறையின்  www.forests.tn.gov.in வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf  என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2019 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.