நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

மத்திய உளவுத் துறையில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத் துறையில் காலியாக உள்ள 1054 செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:09 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத் துறையில் காலியாக உள்ள 1054 செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 1054 (தமிழகத்திற்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)

பதவி: Security Assistant (Executive)

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 3 நிலைகளாக நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டும் ரூ.50. பெண்கள், இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://mha.gov.in/sites/default/files/VacanciesSecurityAssistant_18102018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.