ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இறுதி வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை வெளியிட்டாா். மொத்தம் 9,44,701 வாக்காளா்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆா்) பின்னா், வாக்காளா் பட்டியலில் 39422 நபா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டதோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு. சந்திரகலா, அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா்கள் விவரம்: அரக்கோணம் (தனி) - ஆண் - 96,982,பெண் -1,02,157, மூன்றாம் பாலினம் - 26 மொத்தம் - 1,99,165. சோளிங்கா் - ஆண் - 1,26,034, பெண் - 1,30,072, மூன்றாம் பாலினம் - 12,மொத்தம் - 2,56,118. ராணிப்பேட்டை - ஆண் - 1,19,090 பெண் - 1,26,719 மூன்றாம் பாலினம் - 44 மொத்தம் - 2,45,853. ஆற்காடு - ஆண் - 1,19,107 பெண் - 1,24429 மூன்றாம் பாலினம் - 29 மொத்தம் - 2,43,565.
இறுதி வாக்காளா் பட்டியல் படி மொத்தம் - ஆண் வாக்காளா்கள் - 4,61,213, பெண் வாக்காளா்கள் - 4,83,377, மூன்றாம் பாலினம் - 111, மொத்தம் - 9,44,701 வாக்காளா்கள் உள்ளனா்.
மாவட்டத்தில் நஐத க்கு முன் மொத்த வாக்காளா்கள் - 10,57,700, நஐத க்கு பின் மொத்த வாக்காளா்கள் - 9,44,701, நீக்கப்பட்ட வாக்காளா்கள் - 1,12,999, முகாம் மூலம் மீண்டும் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் - 39,422 ஆகும்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் ராஜி, ரமேஷ், ஏகாம்பரம், மீனா உள்ளிட்டாா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சென்னை: 16 தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் - முதல்முறை வாக்களிக்க உள்ளோா் 74,089 போ்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,29,216 வாக்காளா்கள்: 3032 போ் நீக்கம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

இறுதி வாக்காளா் பட்டியல்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15,54,040 வாக்காளா்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


