2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலை: டிப்ளமோ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 309 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:12 pm

ஆர். வெங்கடேசன்


தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 309 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.  இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Sub Inspector (SI) Technical 
காலியிடங்கள்: 309
சம்பளம்: மாதம் ரூ. 36,900 -1,16,600. 
தகுதி: அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம்(டிப்ளமோ), பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
 
வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

உடல் தகுதி: ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:  www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.08.2018.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்களுக்கு http://www.tnusrbonline.org/SI%20(Tech)%20Notification.pdf லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.