கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தமிழ்நாடு காவல்துறையில் வேலை... காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு காவல்துறையில் 6,140 இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை, தீயணைப்போர்) பணியிடங்களுக்கான

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:05 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு காவல்துறையில் 6,140 இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட, மாநகர ஆயுதப்படை, தீயணைப்போர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) போன்ற பணியிடங்களுக்கு மார்ச் , ஏப்ரல் 2018-இல் தேர்வு நடைபெறவுள்ளது. 

இப்போட்டித் தேர்வில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மனுதாரர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டித் தேர்வுகளுக்கான முன் ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இந்த பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் மாவட்ட வேலைவாய்ப்பு ( பொது) அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

இத்தேர்வுக்கு விண்ணப்பித்து, இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள், அவர்களின் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை, உரிய கல்விச் சான்றிதழ்களுடன் வரும் 3 1-ஆம் தேதிக்குள் சந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை (பொது), அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnusrbonline.org/pdfs/Notification%20CR%202017-18.pdf என்ற இணையதள லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.