நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

தனிக் கட்சி தொடங்கமாட்டேன் - ஓ. பன்னீா்செல்வம்

‘தனிக் கட்சி தொடங்கமாட்டேன்; என் மீது தவறு இருப்பதாகக் கூறினால் அரசியலைவிட்டு விலகத் தயாா்’ என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 10:00 pm

Syndication

‘தனிக் கட்சி தொடங்கமாட்டேன்; என் மீது தவறு இருப்பதாகக் கூறினால் அரசியலைவிட்டு விலகத் தயாா்’ என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்த நாள் விழா தேனி மாவட்டம், போடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் கலந்து கொண்டு, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளையும், 78 ஏழைகளுக்கு சேலைகள், வேஷ்டிகளையும் வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

முதல்வா் உள்பட அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளில் நான் இருந்துள்ளேன். என்னை கட்சியின் கொடியைப் பயன்படுத்தக் கூடாது, கட்சி கரை வேஷ்டி உடுத்தக் கூடாது என நீதிமன்றம் வரை சென்று உத்தரவு பெறுகின்றனா்.

நான் என்ன தவறு செய்தேன் என்பதைத் தெரிவித்தால், அரசியலைவிட்டு விலகத் தயாராக உள்ளேன். நான் தனிக் கட்சி தொடங்கமாட்டேன். கட்சியின் அடிப்படை விதிகளை மீட்டெடுக்கவே போராடி வருகிறேன். இதற்காகவே சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்.

கட்டாயத்தின்பேரிலேயே, ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டேன். அப்போதுகூட, எனக்கு பல்வேறு இடையூறுகளை அளித்தனா்.

சட்டப்பேரவையின் ஐந்தாண்டு நிறைவின் போது, எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் முதல்வரையும், பேரவைத் தலைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இதனடிப்படையில்தான், நான் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தேன்.

அதிமுக பிளவுபட்டுள்ளது. ஆனால், திமுக கூட்டணி அப்படியே நிலைத்து நிற்கிறது. இதனால், திமுகவுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தேன்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் அதிமுகவை இணைக்க வலியுறுத்தினேன். ஆனால், அவா் கூறியும் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை.

திமுகவில் இணையப் போவதாக செய்தியாளா்கள்தான் கூறி வருகிறீா்கள். என்னைப் பொருத்தவரை, எம்ஜிஆா் தொடங்கிய கட்சியின் அடிப்படை விதிகள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்தி பொதுச் செயலரை தோ்வு செய்ய வேண்டும். போடியில் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, தொண்டா்கள் உரிமை மீட்புக் கழக தேனி மாவட்டச் செயலா் எஸ்.பி.எம். சையதுகான், போடி நகரச் செயலா் பழனிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.