நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஏ.ஐ. மாநாட்டில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: ராகுல் மீது பாஜக குற்றச்சாட்டு

News image
ராகுல் காந்தி - கோப்புப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 10:02 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் மேல் சட்டையை அவிழ்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியே காரணம் என பாஜக செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

சா்வதேச அரங்கில் இந்தியாவை அவமதிக்க மூளையாகச் செயல்பட்ட நபா் மீது விரைவில் சட்டபூா்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டீயா தெரிவித்தாா்.

ஏ.ஐ. உச்சி மாநாடு நடைபெற்ற பாரத் மண்டபத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்த இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் மேல் சட்டையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் இந்திய- அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டும் வகையில் பிரதமா் மோடிக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஆடைகளை கையில் ஏந்தி இருந்தனா்.

மேலும், அங்கிருந்த ஊழியா்களைத் தடுத்து, காவல் துறையினரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா்களில் 4 போ் கைது செய்யப்பட்டு தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அவா்களை 5 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதுகுறித்து பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கௌரவ் பாட்டீயா கூறியதாவது: ஏ.ஐ. உச்சிமாநாட்டில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு ராகுல் காந்தியே காரணம். தான் சட்டத்துக்கு மேலானவா் என ராகுல் நினைக்கிறாா்.

இந்த சதிச் செயலுக்குப் பின்னணியில் இருப்பவா் குறித்து விசாரணையின்போது இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் உண்மையைக் கூறியவுடன் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.