கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாரத ஸ்டேட் வங்கியில் 8301 கிளார்க் வேலை: இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள கிளார்க் தரத்திலான 8

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:04 pm

ஆர். வெங்கடேசன்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) நிரப்பப்பட உள்ள கிளார்க் தரத்திலான 8 ஆயிரத்து 301 ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரி இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதில் 7 ஆயிரத்து 200 இடங்கள் புதிய பணியிடங்களாகும். 1101 பணியிடங்கள் பின்னடைவுப் பணிகளாகும். இதில் தமிழகத்திற்கு 346 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. பின்னடைவுப் பணியிடங்களில் தமிழகத்திற்கு 52 இடங்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 885 இடங்களும், மகாராஷ்டிராவில் 730 இடங்களும், ஒடிசா, குஜராத், மேற்குவங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

பணி: Junior Associates (Customer Support & Sales)

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2018-ஆம் தேதியின்படி 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 02.01.1990 மற்றும் 01.01.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் பிராந்திய மொழியில் வாய்மொழித்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் தேர்வு முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்ட தேர்வுகளாக நடைபெறும்.

கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/careers/ongoingrecruitment.html அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/1516358303086_SBI_CLERICAL_ADV_ENGLISH.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.