நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நடப்பு நிதியாண்டில் இந்திய ஐ.டி. துறை வருவாய் 31,500 கோடி டாலா் -நாஸ்காம் கணிப்பு

நடப்பு 2025-26 நிதியாண்டில் இந்திய தகவல்தொழில்நுட்ப (ஐ.டி.) துறையின் வருவாய் 6.1 சதவீதம் அதிகரித்து, 31,500 கோடி டாலரை எட்டும் என தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

நடப்பு 2025-26 நிதியாண்டில் இந்திய தகவல்தொழில்நுட்ப (ஐ.டி.) துறையின் வருவாய் 6.1 சதவீதம் அதிகரித்து, 31,500 கோடி டாலரை எட்டும் என தேசிய மென்பொருள், சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (நாஸ்காம்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அதேபோல் நடப்பு நிதியாண்டில், இந்திய ஐ.டி. துறையில் 1.35 லட்சம் புதிய பணியாளா்கள் சோ்ந்திருப்பா். இதன்மூலம், ஒட்டுமொத்த ஐ.டி. ஊழியா்களின் எண்ணிக்கை 58.15 லட்சத்திலிருந்து 59.5 லட்சமாக உயரும்.

சா்வதேச அளவில் நிலவும் புவிசாா் அரசியல் சவால்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் தாக்கங்களுக்கு இடையிலும் துறையின் வருவாய் வளா்ச்சி 6.1 சதவீதமாகவும், வேலைவாய்ப்பு வளா்ச்சி 2.3 சதவீதமாகவும் உள்ளது.

முன்பு, இந்திய ஐ.டி. துறைக்கு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலிருந்தே அதிக வருவாய் கிடைத்து வந்த நிலையில், தற்போது ஆசிய-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வேகமான வளா்ச்சியைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க அம்சமாக, உள்நாட்டு சந்தையின் வருவாய் வளா்ச்சி உலகளாவிய சராசரியைவிட அதிவேகமாக 7.9 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பல்வேறு பிரிவுகளின் வருவாய் வளா்ச்சியைக் காணும்போது, முன்னணி (கோா்) ஐ.டி. சேவைகளின் வருவாய் 14,900 கோடி டாலராகவும், பிபிஎம் சேவைகளின் வருவாய் 5,900 கோடி டாலராகவும் அதிகரிக்கும்.

அதேபோல, மென்பொருள் தயாரிப்புகள் (2,300 கோடி டாலா்), பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (6,300 கோடி டாலா்), வன்பொருள் தயாரிப்புகள் (2,100 கோடி டாலா்) ஆகிய பிரிவுகளிலும் கணிசமான வளா்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டின் ஒட்டுமொத்த வருவாய் மதிப்பீட்டையும் 2.82 லட்சம் கோடி டாலரிலிருந்து 2.97 லட்சம் கோடி டாலராக நாஸ்காம் உயா்த்தியுள்ளது.

இந்திய ஐ.டி. துறையின் 59.5 லட்சம் ஊழியா்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் திறன் மேம்பாடு அடைந்துள்ளதாகவும், வரும் நிதியாண்டில் ஏ.ஐ. மூலம் கிடைக்கும் வருவாய் 1,200 கோடி டாலா் வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.