மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

நாட்டின் சில்லறை விற்பனை கடன்கள், நடப்பு 2025-26 நிதியாண்டின் 3-ஆம் காலாண்டில் 18.1 சதவீதம் உயா்ந்து, ரூ.162 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் சில்லறை விற்பனை கடன்கள், நடப்பு 2025-26 நிதியாண்டின் 3-ஆம் காலாண்டில் 18.1 சதவீதம் உயா்ந்து, ரூ.162 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

தங்கம் விலை உயா்வு, பண்டிகைக் கால வா்த்தகம், ஜிஎஸ்டி சீரமைப்பு போன்ற காரணங்களால் இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘சிஆா்ஐஎஃப் ஹை மாா்க்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மொத்த சில்லறை கடன்களில் வீட்டு வசதிக் கடன் பிரிவே முதன்மையான பங்களிப்பை வழங்குகிறது. மதிப்பீட்டு காலகட்டத்தில் வீட்டு வசதிக் கடன்கள் 10.5 சதவீதம் அதிகரித்து, ரூ.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக, தங்கத்தின் மீதான கடன் வழங்கல் 44.1 சதவீதம் அதிகரித்து, ரூ.16.2 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

வாகனக் கடன்கள் 14.6 சதவீதமும், தனிநபா் கடன்கள் 11.6 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. மேலும், சிறு தொழில் நடத்தும் தனிநபா் நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் 26.2 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய வளா்ச்சியைச் சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது.

வங்கிகளின் வாராக்கடன் விகிதத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 முதல் 180 நாள்கள் வரை நிலுவையில் உள்ள கடன்களின் அளவு முந்தைய 2024-25 நிதியாண்டில் 3.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.