நியாயவிலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் வேலை
சென்னை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 290 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு


சென்னை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 290 விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: விற்பனையாளர்
காலியிடங்கள்: 175
சம்பளம்: மாதம் ரூ.4,300 - 12,000
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
பணி: கட்டுநர்கள்
காலியிடங்கள்: 115
சம்பளம்: மாதம் ரூ.3,900 - 11,00
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம் என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை - 600 018
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.01.2018
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...