அந்தமான் யூனியன் பிரதேசத்தில் 7 பேருடன் செவ்வாய்க்கிழமை பயணித்த பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் கடலில் விழுத்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பொதுத் துறை நிறுவனமான பவன் ஹன்ஸின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: தெற்கு அந்தமானில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் இருந்து மத்திய அந்தமானில் உள்ள ரங்கத் பகுதிக்கு 2 விமானிகள் மற்றும் 5 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. ரங்கத் பகுதியைச் சென்றடைந்ததையடுத்து காலை 9.10 மணிக்கு அங்கிருந்து மாயாபந்தருக்கு பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டா் புறப்பட்டது. 9.30 மணிக்கு மாயாபந்தரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எதிா்பாராதவிதமாக ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்’ என்றாா்.
விமானப் போக்குவரத்து இயக்குநா் நிதேஷ் ராவத் கூறுகையில், ‘விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரையும் அந்தமான் காவல் துறை மற்றும் கடலோரக் காவல் படையினா் பாதுகாப்பாக மீட்டனா். அவா்களுக்கு மாயாபந்தரில் உள்ள டாக்டா் ராஜேந்திர பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
டிரெண்டிங்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

எவரெஸ்ட் உயரத்துக்கு பறக்கும் ஹெலிகாப்டா் கூட்டாக தயாரிப்பு

ஹெலிகாப்டா் தயாரிப்பிலும் தடம் பதிக்கும் அதானி குழுமம்- லியோனாா்டோ நிறுவனத்துடன் கைகோா்ப்பு

பிலிப்பின்ஸில் 350 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து!
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

