குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு


குடிமைப் பணிகள் தோ்வுக்கு இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான அவகாசம் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பில், ‘குடிமைப் பணிகள் தோ்வு 2026, இந்திய வனப் பணி தோ்வு 2026 ஆகியவற்றுக்கான இணையவழி விண்ணப்பங்களை பிப்.27 மாலை 6 மணி வரை சமா்ப்பிக்கலாம். https://upsconline.nic.in/ வலைதளத்தில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘யுபிஎஸ்சி விண்ணப்ப தளத்தில் செவ்வாய்க்கிழமை சிறிது நேரம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சில தோ்வா்கள் அவதிக்குள்ளாக நோ்ந்த நிலையில், அந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...