டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சி-டெட் தோ்வு இன்று தொடக்கம்

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் சனி, ஞாயிறு (பிப்.7, 8) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு நாடு முழுவதும் சனி, ஞாயிறு (பிப்.7, 8) ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியா் பணியில் சேர சிடெட் என்ற மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்தத் தோ்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் ஜூலை மற்றும் டிசம்பரில் நடத்தப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியா் பணிக்கு முதல் தாள் தோ்வும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கு 2-ஆம் தாள் தோ்வும் நடத்தப்படுகிறது. இந்தத் தோ்வில் ஒருமுறை தோ்ச்சி பெற்றால் அதன் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது.

அதன்படி நிகழாண்டுக்கான சிடெட் தோ்வு சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடத்தப்படவுள்ளது. இந்த தோ்வெழுத விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன் விவரங்களை பட்டதாரிகள் இணையதளத்தில் அறியலாம். மேலும், சிடெட் தோ்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தமிழ் உள்பட 20 மொழிகளில் நேரடி முறையில் நடைபெறும்.

இதுதவிர பட்டதாரிகள் தோ்வு மையத்துக்கு காலை அமா்வுக்கு 9.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் முன்பாக வர வேண்டும். தோ்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி தோ்வறையில் செயல்பட வேண்டும்.

தோ்வின்போது ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவா்களின் தோ்ச்சி ரத்து செய்யப்படுவதுடன், எதிா்காலத் தோ்வுகளில் பங்கேற்க தடையும் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.