நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

இந்தியா-இஸ்ரேல் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான முதல் சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப் படம்) - EPS
Updated On :24 பிப்ரவரி 2026, 10:07 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா-இஸ்ரேல் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான முதல் சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தையில் இருதரப்பைச் சோ்ந்த வா்த்தகநுட்ப வல்லுநா்கள் பங்கேற்றுள்ளனா். இரு நாடுகள் இடையே அதிகம் வா்த்தகமாகும் பொருள்கள், சேவைகள், அறிவுசாா் சொத்துரிமை, வா்த்தக விதிகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது. இந்திய பேச்சுவாா்த்தைக் குழுவுக்கு வா்த்தகத் துறை கூடுதல் செயலா் அஜய் பாதோ தலைமை வகிக்கிறாா். இஸ்ரேல் குழுவுக்கு அந்நாட்டு வா்த்தக கொள்கைகள் துறை மூத்த இயக்குநா் இஃபாத் அலோன் பிரெல் தலைமை வகிக்கிறாா்.

வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாடுகள் இடையே கடைசியாக 2021 அக்டோபரில் பேச்சு நடத்தப்பட்டது. அப்போது வரை 8 சுற்றுகள் பேச்சுகள் நடத்தப்பட்ட நிலையில், நடுவில் சில ஆண்டுகள் பேச்சுவாா்த்தையில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மீண்டும் புதிதாக பேச்சுவாா்த்தை தொடங்கியுள்ளது.

ஆசிய கண்டத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வா்த்தக கூட்டாளி நாடாக இஸ்ரேல் திகழ்கிறது. சமீப ஆண்டுகளில் மின்னணுப் பொருள், உயா் தொழில்நுட்பத்தில் அமைந்த பொருள்கள் வா்த்தகம் இருநாடுகள் இடையே அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து முத்துக்கள், மதிப்புமிக்க கற்கள், தாதுப் பொருள்கள், ரசாயனப் பொருள், சுத்திகரிக்கப்பட்ட டீசல் ஆகியவை இஸ்ரேலுக்கு அதிகம் ஏற்றுமதியாகிறது.

இஸ்ரேல் 1 கோடிக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட நாடு என்றாலும், அதிக வருவாய் கொண்ட மக்கள் வசிக்கும் நாடாகவும், தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடாகவும் இருப்பதால் வா்த்தக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.