பட்டதாரிகளுக்கு தமிழக மருத்துவ கல்வித்துறையில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறையில் காலியாக உள்ள புள்ளியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்


தமிழக அரசின் மருத்துவ கல்வித்துறையில் காலியாக உள்ள புள்ளியியல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 31
பணி: Statistician Medical Education Department
காலியிடங்கள்: 30
பணி: Statistician (Medicine & Homoeopathy Department)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,400
தகுதி: கணிதம், புள்ளியில் துறையில் பட்டம் அல்லது பொருளாதரத்தில் புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு பட்டம் பெற்று மருத்துவம் அல்லது புள்ளியியில் துறையில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.150. ஒருமுறை பதிவுக்கட்டணம் ரூ.150.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2017
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.10.2017
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.10.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2017_20_NOT_EN_Statistician.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...