இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ், அதன் பங்கு விற்பனையின் இறுதி நாளான இன்று 43.66 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 3:07 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பருத்தி நூல் உற்பத்தியாளரான ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ், அதன் பங்கு விற்பனையின் இறுதி நாளான இன்று 43.66 மடங்கு வரையான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக இன்று தெரிவித்தது.

ரூ.110.24 கோடி மதிப்புள்ள ஐபிஓ மூலம் 1,06,00,000 பங்குகளுக்கு நிகரான 46,28,41,632 விண்ணப்பங்களை பெற்றதாக தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி-யின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தனி நபர் குறைந்தபட்சம் 144 ஈக்விட்டி பங்குகளுக்கும் அதற்கு மேற்பட்ட பங்குகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு மூலம் 220.30 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில், முதலீட்டாளர்களுக்கான தனிநபர் ஒதுக்கீடு மூலம் 76.63 மடங்கு சந்தாவைப் பெற்றது. இதில் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 3.94 மடங்கு சந்தாவைப் பெற்றது.

மொத்தம் 1,06,00,000 பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், அதன் விலை வரம்பு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.95 முதல் ரூ.104 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம், ஐபிஓவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை, ரூ. 39 கோடி செலவில் 4.2 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்குப் பயன்படுத்தும். மேலும் ரூ.14.89 கோடி கடன்களை திருப்பிச் செலுத்தவும், ரூ.44 கோடி செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காகவும், மீதமுள்ள தொகை பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.

செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த ஆறு மாதங்களில், நிறுவனம் ரூ.7 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தையும், செயல்பாடுகள் மூலம் ரூ.132.08 கோடி வருமானத்தையும் ஈட்டியுள்ளது.

summary

The initial public offer of cotton yarn manufacturer Shree Ram Twistex Ltd received 43.66 times subscription on the final day of share sale on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.