நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான "Air India Engineering Services" நிறுவனத்தில் நிரப்பப்பட 75 Driver மற்றும் Utility Hands பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:57 pm

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான "Air India Engineering Services" நிறுவனத்தில் நிரப்பப்பட 75 Driver மற்றும் Utility Hands பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Driver

காலியிடங்கள்: 15

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Utility Hands

காலியிடங்கள்: 60

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ,15,418

வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும் .

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை "Air India Engineering Services Limited" என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யா எடுத்து செலுத்த வேண்டும். டி.டி.யின் பின்புறம் விண்ணப்பதாரரின் முழுபெயர் மற்றும் தொலைபேசி எண்ணை குறிப்பிடவும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள், பணி அனுபவச் சான்று போன்றவற்றின் அசல் மற்றும் நதல்களையும் இணைத்து தேர்வின் போது சமர்பிக்க வேண்டும். 

டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.10.2017

தேர்வுகள் நடைபெறும் இடம்: Office of Air India, Air India Engineering Complex, HR unit, APU Centre, NTA (New Technical Area), Dum Dum, Kolkata - 700 052

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.