ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 5,813 பயிற்சிப் பணிகள்: நவ.3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அனைவராலும் ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தின் சென்னை


அனைவராலும் ஒஎன்ஜிசி என அழைக்கப்படும் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரியாவு நிறுவனத்தின் சென்னை உள்ளிட்ட 22 கிளை நிறுவனங்களில் 5813 பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து நவம்பர் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கிளைகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. Agartala Apprentice – 187
2. Ankeleshwar - 486
3. Ahmedabad - 506
4. Bokaro - 47
5. Cambay - 115
6. Chennai - 138
7. Dehradun - 367
8. Delhi - 284
9. Goa - 28
10. Jorhat - 224
11. Kakinada -104
12. Hazira Plant -181
13. Jodhpur - 49
14. Karaikal - 275
15. Kolkata - 78
16. Mehsana - 458
17. Mumbai - 560
18. Nazira - 782
19. Rajahmundry - 385
20. Silchar - 78
21. Uran -120
22. Vadodara - 280
வயதுவரம்பு: 1.11.2017 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின்னர் வர்த்தகம், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்னர் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அந்தந்த கிளையின் எச்.ஆர்.பிரிவு அதிகாரியின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...