மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணி

புது தில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லோயர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:40 pm

ஆர். வெங்கடேசன்

புது தில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லோயர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

பணி: ஸ்டெனோகிராபர் - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - 04
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பதோடு 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: லோயர் டிவிசன் கிளார்க் - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடப் பிரிவில் 6 மாத டிப்ளமோ முடித்து ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பியூன் - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dciindia.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary incharge,

Dental Council of India,

Aiwan-E-Galib Marg,

Kotla Road,

NEWDELHI- 110002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.03.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dciindia.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.