சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணி
சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி, எம்எஸ்சி முடித்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பிஎஸ்சி, எம்எஸ்சி முடித்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சவூதி அரேபிய சுகாதார அமைச்சக அரசு மருத்துவமனை
பணி: செவிலியர்
தகுதி: 10, 12ஆம் வகுப்பில் 70 சதவிகித மதிப்பெண்கள் மற்றும் செவிலியர் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிஎஸ்சி, எம்எஸ்சி பட்டம் பெற்று அதே துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
புதுடில்லியில் 17.10.2015 முதல் 19.10.2015 வரையிலும், ஹைதராபாத்தில் 21.10.2015 - 22.10.2015 ஆகிய நாட்களிலும், பெங்களூருவில் 24.10.2015 - 27.10.2015 வரையிலும் நடைபெறுகிறது.
சம்பளம்: 2 வருட பணி அனுபவமுள்ள பிஎஸ்சி செவிலியர்களுக்கு ரூ.75,000, எம்எஸ்சி செவிலியர்களுக்கு ரூ.1,00,000 வழங்கப்படும்.
மேலும், இலவச விமான டிக்கெட், தங்குமிடம், இலவச போக்குவரத்து வசதி, வருடத்திற்கு 30-45 நாட்கள் விடுப்புடன் கூடிய முன்பண சம்பளம் மற்றும் பிற சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றுடன் ஒரு புகைப்படத்தை தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ovemclsn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.10.2015க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 044-22502267/22505886/08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...