நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை கைது செய்தது தில்லி போலீஸ்..

News image
தில்லி செங்கோட்டை.- படம்: ஏபி
Updated On :22 பிப்ரவரி 2026, 7:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பூரில் பயங்கரவாதச் சதித் திட்டம் தீட்டிய 8 பேரை தில்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை தில்லி காவல் துறையினர் தமிழ்நாட்டின் திருப்பூரில் கைது செய்தனர்.

கடந்தாண்டு நவ. 10 ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டைக்கு அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் பிப். 6 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புக்கு பழிவாங்க பயங்கரவாதக் குழு மேற்கொண்ட முயற்சிகளுடன் இந்தியாவில் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

நாட்டில் பயங்கரவாத சதித் திட்டம் தொடர்புடையதாக வெளியான தகவலின் அடிப்படையில், சி.சி.டி.வி கண்காணிப்பு, வாகன சோதனைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கூடுதல் பணியாளர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தில்லி பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் எட்டு பேரை தில்லி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள், வெளிநாட்டில் உள்ளவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து மிசானூர் ரஹ்மான், முகமது ஷபாத், உமர், முகமது லிட்டன், முகமது ஷாஹித் மற்றும் முகமது உஜ்ஜால் என அடையாளம் காணப்பட்டுள்ள ஆறு பேரும், மேற்கு வங்கத்தில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தியதாகவும் காவல் துறையினர் தகவல்கள் தெரிவித்தனர்.

summary

The Delhi Police has busted a major terror module with alleged links to Pakistan-based terror outfit Lashkar-e-Taiba (LeT), Pakistan’s spy agency Inter-Services Intelligence (ISI), and Bangladesh-based extremist organisations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.