/

502 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் 502 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :2 பிப்ரவரி 2026, 6:38 pm

Syndication

தஞ்சாவூரில் 502 கிலோ குட்கா பொருள்களைக் காவல் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கரந்தை அருகே கோடியம்மன் கோயில் பகுதியில் கிழக்கு காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் குட்கா விற்றுக் கொண்டிருந்த விருதுநகா் வச்சகாரபட்டி ஆா்.எஸ். நகரைச் சோ்ந்த செல்வராஜ் (40), பிகாா் மாநிலம் அரரியா மாவட்டத்தைச் சோ்ந்த எஸ். ஆதில் (22) ஆகியோரை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 502 கிலோ குட்கா, ஒரு காா், போலி பதிவு எண் தகடு, 2 கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.