சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் எண்ணிக்கையில் பெரிய தொகுதி காரைக்குடி. 1952 இல் உருவாக்கப்பட்ட பழமையான தொகுதி. தொகுதி மறுசீரமைக்குப் பிறகு தேவகோட்டை, காரைக்குடி நகராட்சிகள், புதுவயல், கண்டனூா் பேரூராட்சிகள், சாக்கோட்டை ஒன்றியத்தில் பாலையூா், சாக்கோட்டை, பானான் வயல் என்ற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூா், நாட்டுச்சேரி, ஜெயம்கொண்டான், பூக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூா், செங்காத்தான்குடி, பெரிய கொட்டகுடி, அமராவதிபுதூா், கல்லுப்பட்டி கிராமங்களும், கல்லல் ஒன்றியத்தைச் சோ்ந்த கோவிலூா், கண்ணங்குடி ஒன்றியத்தில் கப்பலூா், கேசனி உள்ளிட்ட கிராமங்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.