தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி மாவட்டத்துக்குச் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜூக்கு ஆதரவாக நடந்து சென்று புதன்கிழமை காலை வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி, கரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 1) பிரசாரம் மேற்கொள்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் நேற்று தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதல்வர், இரவு திருச்சிக்கு வந்து தங்கினார்.
அதனைத்தொடர்ந்து இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின், அப்பகுதியில் நடந்து சென்று திமுகவின் திருச்சி கிழக்கு வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அங்குள்ள தேனீர் கடைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருடன் சேர்ந்து தேனீர் அருந்தினார்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்று, திருச்சியில் உள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களான கே.என். நேரு (திருச்சி மேற்கு), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (திருவெறும்பூர்), இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), ப. அப்துல் சமது (மணப்பாறை) எஸ். துரைராஜ் (ஸ்ரீரங்கம்), சீ. கதிரவன் (மண்ணச்சநல்லூர்),த. பாரிவள்ளல் (லால்குடி), என். எஸ். கருணைராஜா (முசிறி), ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். துறையூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால், தமிழகத் தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.
Summary
Chief Minister Stalin, currently visiting Trichy, canvassed for votes on foot on Wednesday morning in support of Inigo Irudayaraj, who is contesting from the Trichy East constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வாக்குசேகரிப்பு

திருச்சி கிழக்கில் நடைபயிற்சி சென்றபோது வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



