மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சென்னை அண்ணா நகரில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை அண்ணா நகரில் வேட்பாளர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தது தொடர்பாக...

News image

சென்னை அண்ணா நகரில் வேட்பாளர்களுடன் வாக்கு சேகரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். - ட்விட்டர்

Updated On :20 ஏப்ரல் 2026, 3:45 am

சென்னை அண்ணா நகரில் வேட்பாளர்களுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திங்கள் காலை நடந்து சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாா்ச் 30- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

கடந்த ஏப்ரல் 10 -ஆம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வரும் வேட்பாளா்கள் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. வரும் 23- ஆம் தேதி (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி தமிழகம் முழுவதிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை சென்னையில் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை அண்ணா நகர் தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் திங்கள் காலை நடந்து சென்று வாக்கு சேகரித்தார்

அண்ணா நகர் பூங்கா பகுதியில் இருந்து வேட்பாளருடன் நடக்கத் தொடங்கி அந்த பகுதி மக்களிடமும், பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்த முதல்வருடன் பூங்காவில் இருந்தவர்கள் கைகுலுக்கியும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

தொடர்ந்து சென்னை மதுரவாயல் தொகுதி வேட்பாளர் காரப்பாக்கம் கணபதியை ஆதரித்தும், சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் விருகம்பாக்கம்தொகுதி திமுக வேட்பாளர் பிராபகர் ராஜாவை ஆதரித்து அந்த பகுதியில் வியாபாரிகள், மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.

Summary

Chief Minister M.K. Stalin canvassed for votes on foot in Anna Nagar, Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.