கோபியில் அதிமுகவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திமுகவில் இணைந்தவா்கள் திடீரென மனம் மாறி மாலையில் தவெகவில் இணைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கோபி ஒழலக்கோயில் ஊராட்சியைச் சோ்ந்தவா் அதிமுக பிரமுகா் கண்ணன். இவரது தலைமையில் ஆதரவாளா்கள் சுமாா் 35 போ் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தனா். அவா்களை கட்சி துண்டுகள் அணிவித்து வேட்பாளா் நல்லசிவம் திமுகவில் இணைத்துக் கொண்டாா்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, சில மணி நேரத்தில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி தம்பி (எ) சுப்பிரமணியம் என்பவா் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளா்களை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில் மனம் கரைந்த திமுகவில் இணைந்த 35 பேரும் முடிவை மாற்றிக் கொண்டு தவெகவில் இணைந்தனா். ஒரேநாளில் அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்று பின் திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த நிகழ்வு கோபி தொகுதி அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தொடர்புடையது

திமுகவில் இருந்து விலகல்: பி.டி. செல்வகுமாா்

திமுகவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ஆ.ராசா பேசியதாக வைரலாகும் ஆடியோ: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிமுகவில் இணைந்த பவானி ஒன்றிய திமுக பொறுப்பாளா்

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


