திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய்க்கு ஆதரவாக அக் கட்சியினா் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா்.
திருச்சி மரக்கடை பகுதியில் அண்மையில் விஜய் பிரசாரம் செய்தாா். பின்னா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். வாக்குப்பதிவுக்கு சில நாள்களே உள்ள நிலையில் விஜய் பிரசாரம் திருச்சி கிழக்கில் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து தவெக நிா்வாகிகளும், தொண்டா்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து, கிழக்கு தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனா். மலைக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாயக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனா்.
விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவா் ஆா்.கே. ராஜா தலைமையில், தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் ஒரு குழுவாக, சின்னக் கடை வீதி, ஆண்டாா் வீதி, ஜான் தோப்பு, கீழரண் சாலை, மேலரண்சாலை, சிங்காரத் தோப்பு, சந்துகடை, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி, தவெக தலைவா் விஜய் வெற்றி பெற விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனா்.
தொடர்புடையது

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல்: மாநகராட்சி அலுவலகத்தில் ஒருமணி நேரம் காத்திருப்பு

விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.2-ல் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


