தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் சென்று மக்களை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த முதல்வர் ஸ்டாலின், இன்று (ஏப். 15) காலை நடைப்பயிற்சியின் போது மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
பாலக்கோடு திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினுடன் அங்கிருந்தவர்கள் கைகுலுக்கி செல்பி எடுத்துக் கொண்டனர்.

வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
பாலக்கோடு நகரில் முக்கிய வீதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவைகளுக்கு நடந்தே சென்று, கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை சந்தித்து நலம் விசாரித்தார். அங்கு ஒரு குழந்தைக்கு திராவிடன் என்றும் அவர் பெயர் சூட்டினார்.
அதைத்தொடர்ந்து ஸ்தூபி திடல், கடைவீதி, பேருந்து நிலையம், தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்கள், வியாபாரிகள், பயணிகளைச் சந்தித்து திமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
Summary
In the Palacode Assembly constituency of Dharmapuri district, Chief Minister Stalin visited streets and residential areas to meet the people and seek their votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலக்கோட்டில் வீதிவீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்த முதல்வா் மு.க.ஸ்டாலின்

கமுதியில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பு

வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK | MK Stalin

வேலூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

