வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக நேற்று இரவு வேலூர் வந்திருந்து தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.
இன்று காலை அங்கிருந்த கார் மூலமாக புறப்பட்டு கே.வி. குப்பம் தனி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர் ராஜலட்சுமியை ஆதரித்து கே.வி. குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
கே வி குப்பம் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு வீட்டுக்குள் சென்று அமர்ந்து அவர்களுடன் பேசி மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால், அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, அங்கே பிரசாரம் மேற்கொள்ளும்போது அரசுப் பேருந்தில் ஏறி மகளிரிடம் பேசினார் முதல்வர். கே வி குப்பத்தில் முதலமைச்சர் நடை பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நிலையத்தில் இருந்த லத்தேரி செல்லும் மகளிர் இலவச அரசு பேருந்தில் ஏறி அதிலிருந்த மகளிரிடம் கலந்துரையாடினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்த மக்கள் உற்சாகமாக அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
Summary
Tamil Nadu Chief Minister Stalin went door to door in Vellore to collect votes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

பழனியில் அதிமுக வேட்பாளா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

கமுதியில் அதிமுகவினா் வாக்குச் சேகரிப்பு
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



