திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விஐடி பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியானது! கலந்தாய்வில் பங்கேற்பது எப்படி?

விஐடி பி.டெக். ரேங்க் பட்டியல் வெளியான நிலையில் கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி..

News image

விஐடி பல்கலை வளாகத்தில் நடந்த பி.டெக். நுழைவுத் தோ்வு - கோப்புப்படம் - DPS

Updated On :11 மே 2026, 2:59 pm IST

விஐடி பல்கலைக்கழகத்தின் பி.டெக். பட்ட படிப்புக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ரேங்க் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள், கலந்தாய்வுக்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

  • ஒன்று முதல் 20 ஆயிரம் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கான பதிவு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த மே 8 முதல் மே 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 12 முதல் 13ஆம் தேதி என இரண்டு நாள்களுக்குள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.

  • 20,001 முதல் 45 ஆயிரம் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கான பதிவு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த மே 18 அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 19 முதல் 20ஆம் தேதி என இரண்டு நாள்களுக்குள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.

  • 45,001 முதல் 75 ஆயிரம் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கான பதிவு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த மே 27 அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மே 28 முதல் 29ஆம் தேதி என இரண்டு நாள்களுக்குள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.

  • 70,001 முதல் 1,00,000 ரேங்க் பெற்ற மாணவர்களுக்கான பதிவு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த ஜூன் 6 அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் 8ஆம் தேதி என இரண்டு நாள்களுக்குள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.

  • ஒரு லட்சத்துக்கு மேல் ரேங்க் பெற்ற மாணவர்களுக்கான பதிவு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த ஜூன் 17 அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 17 முதல் 18ஆம் தேதி என இரண்டு நாள்களுக்குள் சாய்ஸ் ஃபில்லிங் செய்ய வேண்டும்.

சாய்ஸ் ஃபில்லிங் அடிப்படையில் மாணவர்களுக்கான படிப்பு குறித்து மே 14ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும். அதிலிருந்து 4 அல்லது ஐந்து நாள்களுக்குள் முதல் தவணைக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

2026- ஆம் கல்வியாண்டில் விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி வரும் மே மாதம் 3-ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டு நாள்களுக்கு முன்பு ரேங்க் பட்டியல் வெளியானது.

மாணவர்களின் மின்னஞ்சல்களுக்கு அவர்கள் பெற்ற ரேங்க் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கும்.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் நுழைவுத் தோ்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கின.

என்ன ரேங்க்? நுழைவுத் தோ்வில் தகுதி மதிப்பெண் 1 முதல் 1 லட்சம் வரை பெற்ற மாணவ, மாணவிகள் வேலூா், சென்னை, அமராவதி, போபால் ஆகிய நான்கு வளாகங்களில் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தாங்களே தோ்வு செய்து கொள்ளலாம்.

மேலும் தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கும் மேல் உள்ளவா்களுக்கு விஐடியின் ஆந்திரத்தில் உள்ள அமராவதி, மத்தியபிரதேசத்தில் உள்ள போபால் வளாகத்தில் மட்டுமே இடம் கிடைக்கும்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் கலந்தாய்வு தொடரும்.

தகுதி மதிப்பெண் 1 முதல் 20,000 வரை பெற்றவா்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வும்,

20,001-45,000 வரை பெற்றவா்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வும்,

45,001-70,000 வரை பெற்றவா்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வும்,

70,001-1,00,000 வரை பெற்றவா்களுக்கு நான்காம் கட்ட கலந்தாய்வும்,

தகுதி மதிப்பெண் 1 லட்சத்துக்கும் மேல் பெற்றவா்களுக்கு ஐந்தாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.

அனைத்து மாணவா்களுக்கும் ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்க உள்ளன. இதுதவிர கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கலை அறிவியல் படிப்புகளில் சேர நுழைவுத் தோ்வு கிடையாது என்றும் பல்கலைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமாா் 129 நகரங்களில் உள்ள 212 மையங்களில் மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வு நடைபெற்றது, துபை, அபுதாபி, கத்தாா், மஸ்கட், பஹ்ரைன், குவைத், சிங்கப்பூா், மலேசியா, ஷாா்ஜா உள்ளிட்ட 9 நாடுகளில் விஐடி நுழைவுத் தோ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

VIT B.Tech. Rank list released! How to participate in the counselling?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.