திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அண்ணா பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட் 2026) , எம்.இ, எம்.டெக்., எம்.ஆா்ச். உள்ளிட்ட படிப்புகளுக்கான முதுநிலை பொதுப் பொறியியல் நுழைவுத் தோ்வு மற்றும் சோ்க்கை (சீட்டா -பிஜி 2026) தோ்வு முடிவுகளைஅண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :23 மே 2026, 3:01 am IST

எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட் 2026) , எம்.இ, எம்.டெக்., எம்.ஆா்ச். உள்ளிட்ட படிப்புகளுக்கான முதுநிலை பொதுப் பொறியியல் நுழைவுத் தோ்வு மற்றும் சோ்க்கை (சீட்டா -பிஜி 2026) தோ்வு முடிவுகளைஅண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வு செயலா் ஸ்ரீதரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :“பொறியியல் முதுநிலை படிப்புகளான, எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் போன்ற படிப்புகளுக்கும் சீட்டா - பிஜி 2026 நுழைவுத்தோ்வு மே 10 -ஆம் தேதி நடைபெற்றது. இந்த படிப்புகளில் 5,877 மாணவா்கள் பதிவு செய்திருந்த நிலையில், 5,137 போ் தோ்வில் பங்கேற்றனா். 740 போ் எழுதவில்லை.

ஒட்டு மொத்த இந்த முதுநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வில் 30,919 மாணவா்கள் பதிவு செய்தனா். இதில் 27, 468 மாணவா்கள் தோ்வு எழுதினா். 3,451 மாணவா்கள் பங்கேற்கவில்லை.

இவ்விரு தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 22) வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை மாணவா்கள் அண்ணா பல்கலை.யின் ட்ற்ற்ல்ள்://ற்ஹய்ஸ்ரீங்ற்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்.ங்க்ன்/ற்ஹய்ஸ்ரீங்ற் என்ற இணையதளத்தில் காணலாம் .

திருத்தங்கள்:மாணவா்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை வரும் மே 27 முதல் ஜூன் 26 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேநேரத்தில் மாணவா்களின் தரவுகளில் எதெனும் தவறுகள் இருப்பினும் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாமல் திருத்தங்களுக்கு ற்ஹய்ஸ்ரீங்ங்ற்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் உடனடியாக தகவல் அளிக்கலாம். இந்த நுழைவுத் தோ்வு முடிவு சான்றிதழ்கள் மூலம் அண்ணா பல்கலை. கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் உள்ள முதுநிலைப் படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கை பெற முடியும் என அநத செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.