சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும் இதுபற்றி சிபிஎஸ்இ இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
பொதுவாக 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றாலும், இந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் நிலை 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறவிருப்பதால், மாணவர்கள் அந்த தேர்வுக்குத் தயாராகும் வகையில் இன்று 10ம் வகுப்புக்கு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
டிஜி லாக்கரில் மாணவர்கள் தங்களது விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொண்டால் தேர்வு முடிவுகள் வெளியானதும் விரைவாக தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் சிபிஎஸ்இ நிர்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்த ஆண்டு முதல், 10ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களை மேம்படுத்தும் வகையில் மே 15 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை இரண்டாம் நிலை பொதுத் தேர்வுகளை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியிருக்கிறது. இரண்டாம் நிலை தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களில் அதிகபட்சமாக மூன்று பாடங்களின் மதிப்பெண்களை மாணவர்கள் மாற்றிக் கொள்ளலாம்.
டிஜி லாக்கர் இணையதளத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் வசதிக்காக இணையதளங்கள் மட்டுமல்லாமல் பல டிஜிட்டல் முறைகளில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள சிபிஎஸ்இ ஏற்பாடு செய்துள்ளது. இதனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தைப் பார்ப்பதால் அது முடங்கும் அபாயம் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்கள் கட்டி சீல் வைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். அங்கு மிகுந்த கட்டுப்பாட்டுடன் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறும். அதன்பிறகு, விடைத்தாள்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதில் உள்ள தரவுகள் சரி பார்க்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
நாடு முழுவதும் விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அனைத்துப் பணிகளும் முழுமையடைந்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகலாம்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே தேர்வு முடிவுகளை வெளியிடும் வகையில் அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை அடைவதால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில்லாமல் மே 15ஆம் தேதி இரண்டாம் நிலை 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன.
வெகு தாமதத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு மே 13ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு அவ்வளவு தாமதமாக வெளியாகக் கூடாது என அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
Regarding the information that CBSE exam results will be released today..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



