திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்வது பற்றி..

News image

உமங் செயலி - x - Image

Updated On :16 ஏப்ரல் 2026, 10:50 am IST

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வெழுதியிருக்கும் மாணவ, மாணவர்கள், தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பார்கள்.

2026 முதல் 10ஆம் வகுப்புக்கு இரண்டாம் நிலை தேர்வு மே மாதம் நடைபெறும் என்பதால், ஏப்ரல் மாதத்தில் தேர்வு முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. நாள்தோறும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்களும் பெற்றோர்களும் காத்திருக்கிறார்கள். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை சிபிஎஸ்இ முன்கூட்டியே அறிவிப்பதில்லை. ஒரு நாள் காலையில் நேரடியாக தேர்வு முடிவுகளை வெளியிட்டு விடும் அவ்வளவுதான். எனவே தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பெற்றோர் அல்லது மாணவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தேர்வு முடிவுகள் குறித்து மற்ற செய்தி ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம். மாணவர்கள் சிபிஎஸ்இ இணையதளத்தை மட்டும் நாள்தோறும் பார்த்துக் கொள்ளலாம்.

அடுத்து சிபிஎஸ்இ மாணவர்கள் பலரும் டிஜி லாக்கரில் தங்களது தேர்வு விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக் கொண்டால் தேர்வு முடிவுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

அடுத்து, உமங் செயலி மூலமாகவும் மாணவர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.

உமங் செயலியில் தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

பெற்றோர் தங்களது செல்போனில் ஆப் ஸ்டோர் வழியாக உமங் செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

அதில் சேவைகள் என்ற பிரிவின் கீழ் சிபிஎஸ்இ என்பதை கிளிக் செய்து 10 அல்லது 12ஆம் வகுப்புக்கான லிங்குகளை தேர்வு செய்யவும்.

அந்தப் படிவத்தில் மாணவர்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பள்ளியின் எண் உள்ளிட்டத் தகவல் போன்ற தேவையான விவரங்களை உள்ளிட்டு சப்மிட் செய்து வைத்துக் கொள்ளவும்.

மாணவர்கள் முன்கூட்டியே உமங் செயலி அல்லது டிஜி லாக்கரில் தங்களது விவரங்களை பதிவு செய்து வைத்துக் கொள்ள சிபிஎஸ்இ நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளின்போது எந்த விவரங்களையும் அளிக்காமல் நேரடியாக மதிப்பெண்களை அறிய இது உதவும்.

எப்போது தேர்வு முடிவுகள் வெளியானாலும் உடனடியாக மாணவர்கள் தங்கள்து தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் விவரங்களை உமங் செயலியில் சென்று பார்த்துக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செயது கொள்ளலாம். அது மட்டுமல்ல, இந்த செயலியில் பதிவிறக்கம் செய்யும் டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழை, உடனடியாக தேவைப்படும் பள்ளி அல்லது கல்லூரி விண்ணப்பங்களுடன் இணைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்ப்பதால் சிபிஎஸ்இ இணையதளங்கள் முடங்கும் போதும் நாம் சிக்கலின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதற்காகவே மாணவர்கள் பல்வேறு டிஜிட்டல் முறைகளில் தேர்வு முடிவுகளைப் பார்க்க சிபிஎஸ்இ வழிவகை செய்திருக்கிறது.

மாணவர்களுக்கான முக்கிய அறிவுரை!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய மாணவர்கள் அதிகாரப்பூர்வ சிபிஎஸ்இ இணையதளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களைத் தவறாமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு முடிவு நாளன்று அதிகம் பேர் பார்ப்பதால் இணையதளங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டால், மதிப்பெண்களை விரைவாக அணுகுவதற்கு டிஜிலாக்கர் மற்றும் உமங் ஆகியவை உதவும் என்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.