சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதியிருக்கும் மாணவர்கள், அடுத்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஆனால், எப்போதும் தேர்வு தேதி குறித்து சிபிஎஸ்இ முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கமில்லை. திடீரென ஒரு நாள் காலையில் தேர்வு முடிவுகளை அறிவித்துவிடும்.
இந்த ஆண்டு, விடைத்தாள்களை திருத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருவதால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மிக விரைவாக தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்புக்கான இரண்டாம் நிலை தேர்வு மே 15ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. எனவே, முதல் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரலுக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. பிறகு 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே மாதத்தில் வழக்கம் போல வெளியாகலாம்.
தேர்வு முடிவுகள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளப் பக்கங்களில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியாகும். பொதுவாகவே முன்கூட்டியே தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் வெளியிடப்படாது. எனவே, யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்.
பொதுவாக முதலில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவு முதலில் வெளியாகும். சில மணி நேரங்களில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



