2026-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 13) வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின.
இந்த தேர்வை 17.68 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில், இந்தாண்டு முதன்முறையாக திரை வழி திருத்தம் (OSM) முறையில் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கு தங்கள் பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தெரிந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
Summary
The Central Board of Secondary Education has released the Class 12 public examination results for the year 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










