அண்மையில், ஜவுளிக்கடை பொம்மைகளில் ஜட்டி, பிரா போன்ற உள்ளாடைகளை மட்டும் அணிவித்து விளம்பரமாகக் கடையின் முன் காட்சிப்படுத்தக் கூடாது என்று மும்பை மாநகராட்சி ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறது. விளம்பரப் பொம்மைக்குப் புடவை கட்டும்போதுகூட, அந்தக் கண்ணாடி அறையைத் துணியால் மறைத்துவிட்டுக் கட்டிவிடுகின்ற நாகரிகம் தெரிந்த இந்தியாவில், இவ்வாறு உள்ளாடையுடன் பொம்மை நிற்பது சரியில்லைதானே? இது இளம்மனதில் பாலியல் தூண்டுதல்களை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதானே? ஆனால், "இவர்கள் என்ன கலாசாரக் காவலர்களா?' என்று மும்பை மாநகராட்சி மீது பலர் வசை பாடுகிறார்கள்.