உறக்கத்தினால், நினைவகம் நன்கு செயல்படுமா? அதிசயம்தான்... ஆனால் உண்மை. நவீன அறிவியல் புதிய புதிய நாம் எதிர்பார்க்காத விஷயங்களை வெளிக்கொணருகிறது. அதில் ஒன்றுதான் உறக்கத்தின்போது முகங்களையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதும், ஆழ்ந்த தரமான தூக்கம் நினைவகத்தைத் தூண்டி, மீண்டும் செயல்பட வைக்கமுடியும் என்பதும். நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது - தரமான தூக்கத்துடன் இணைந்து - முக்கியமானது என்று இன்றைய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை, வடமேற்கு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, அதன் முடிவினை இயற்கை அறிவியல் பத்திரிகையான, கற்றலின் அறிவியல் (Nature partner journal NPJ: Science of Learning ) என்னும் இதழில் 2022 ஜனவரி 12-ம் நாள் வெளியிட்டுள்ளனர்.