யார் இந்த மாவோயிஸ்டுகள்? நக்சல்பாரி என்ற மேற்கு வங்காள மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து, கானு சன்யால், சாரு மஜும்தார் என்பவர்கள் ""ஆயுதப்போராட்டத்தின் மூலம் நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து நிலத்தைக் கைப்பற்றி ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ் லெனினிஸ்ட் என்ற பிரத்யேக கம்யூனிஸ்ட் அமைப்பை 1967-இல் ஏற்படுத்தினர். அது 1970-ஆம் வருடத்தில் இருந்து மிகப்பெரிய இயக்கமாக உருவாகி நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்பட்டது, அது மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பரவியது.