இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

மூன்றாம் பாலும் முறையில்லா உறவும்

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில், அந்தத் தீர்ப்பை

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:24 pm

பத்மன்

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து சட்டத்தின் மாட்சிமையை உச்சநீதிமன்றம் மீண்டும் நிரூபித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியத்தை மட்டுமல்ல, வேதனையையும் சேர்த்து

அளிக்கிறது.

முதலில் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் இல்லாத மூன்றாம் பாலினமான அரவாணிகள் (திருநங்கைகள்) பிரச்னை வேறு. முப்பாலுக்கு அப்பாலாய், ஆணாக இருந்துகொண்டே ஆணோடு உறவு கொள்வதற்கும், பெண்ணாக இருந்துகொண்டே பெண்ணோடு உறவு கொள்வதற்கும் உரிமை கோருகின்ற ஓரினச் சேர்க்கையாளர் பிரச்னை வேறு.

மனித உணர்வுகளில் உள்ள அன்பு, பாசம், நட்பு ஆகிய உணர்வுகளுக்காக அல்லாமல், காமம் என்ற உணர்வுக்காக மட்டுமே, அதுவும் இயற்கைக்குப் புறம்பான முறை தவறிய காமத்துக்காக மட்டுமே கோரப்படும் ஓரினச் சேர்க்கை என்பது எப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கது?

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே என்றார் மகாகவி பாரதியார்.

ஆண்களோடு ஆண்களும், பெண்களோடு பெண்களும் சேர்ந்து வாழ்வம் இந்த நாட்டிலே என்று இயற்கைக்கு மாறான கோஷத்தை இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் எழுப்புகிறார்கள். அதுமட்டுமல்ல, இது எங்களது உரிமை என்று உரிமைக் குரலும் எழுப்புகிறார்கள்.

மாறிவரும் இளைய சமுதாயத்தின் விருப்பத்தை உணர்ந்துகொண்டு ஓரினச் சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தரவேண்டும் என்பது சிலரது வாதம். இதில் அரசியல்வாதிகளும் அடங்குவர்.

இளைய சமுதாயமே பொங்கி எழுந்து இதற்காகப் போராடுவதுபோன்ற பிம்பத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள். ஒருவேளை இளைய சமுதாயம் அப்படியொரு தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவது மூத்தோர்கள், சான்றோர்களின் கடமை அல்லவா?

தனிமனித விருப்பம் என்றும் உரிமை என்றும் இவர்கள் பல பெயர் சொல்லி அழைக்கும் முறையற்ற காமத்துக்கு எதற்காக சட்டப்பூர்வ அங்கீகாரம்? லஞ்சம் வாங்குவது பல பேரின் விருப்பம் என்பதால் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்துவிடலாமா? வியாபாரம் என்று வந்தால் எப்படியாவது ஏமாற்றத்தானே செய்கிறார்கள் என்பதற்காக மோசடி செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்துவிடலாமா?

விருப்பத்துக்கு மதிப்பளிப்பது என்றால் பலதார திருமணத் தடைச் சட்டம்,  விபசாரத் தடைச் சட்டம், போதைப்பொருள் தடுப்புச் சட்டம் இவையெல்லாம் எதற்கு?

ஆணும் பெண்ணுமாக சேர்ந்துவாழும் சமுதாயத்தில் சில தவறுகள், குற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. இந்தக் கட்டுப்பாடு இருக்கும்போதே குற்றங்கள் நடக்கின்றன என்றால், இந்தக் கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் சிதைந்துபோனால் என்ன ஆகும்? மனித நாகரிகத்தின் அடித்தளமான குடும்பம் என்ற அமைப்பே சிதைந்துபோகுமே!

சம்ஸ்கிருத இலக்கணத்தில் சொற்களுக்கு ஆண்பால் (புலிங்கம்), பெண்பால் (ஸ்த்ரீலிங்கம்), நடுப்பால் (நபும்ஸகலிங்கம்) என்று மூன்று பால் இருப்பதைச் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். தமிழ் இலக்கணத்திலே சொற்களுக்கு இதுபோல் மூன்றாம் பாலினம் இல்லை.

இருப்பினும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், கிளவியாக்கத்தில் (சொல்லாக்கத்தில்) மக்களைப் பற்றிச் சொல்லும்போது ஆண், பெண் மட்டுமின்றி ஆண்தன்மை நீங்கிய மூன்றாம் பாலினர் பற்றிய குறிப்பு உள்ளது. மூன்றாம் பாலினரை, பெண்மையாய் சுட்ட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆக, மூன்றாம் பாலினம் இருப்பதை அந்தக் காலத்தில் இருந்தே சமுதாயம் ஏற்றிருக்கிறது.

ஒரே பாலினத்துக்குள்ளான முறையற்ற காமத்தை எந்த இலக்கியமும், புராணமும், எந்தச் சட்டமும் எக்காலத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை.

தமிழ் இலக்கணத்திலே, பொருந்தாக் காமம்  எனப்படும் கைக்கிளை (ஒருதலைக் காதல்), பெருந்திணை (வயது வித்தியாசம் பாராத காதல்) ஆகியவற்றுக்கு மதிப்பில்லாத போதிலும், இடம் இருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை எனப்படும் கொடுந்திணையான, பாலினம் பாராத பொல்லாக் காமத்துக்கு எந்த வகையிலும் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இனிமேலும் அளிக்கப்படக் கூடாது.

ஏனெனில், மூன்றாம் பாலினத்தாரைப்போல ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரச்னை உடல் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்ததே.

ஆகையால் மனத்தைக் கட்டுப்படுத்தும் மார்க்கத்தை இவர்களுக்கு சமுதாயமும் சட்டமும் கற்றுத்தர வேண்டுமே தவிர, அவர்கள் மனம்போன மார்க்கத்தில் திரிவதற்கு அங்கீகாரம் தந்துவிடக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.