நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு, இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இதுவரை ஹவுஸ்ஃபுல் நிலையே தொடர்ந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் வெற்றி படமாகவே அமைந்துள்ளது.
இந்தப் படத்தில் குறைவான காட்சிகளில் நடிகை த்ரிஷா நடித்திருந்தாலும், தன்னுடைய அழுத்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு, கருப்பு திரைப்படம் நடிகை த்ரிஷாவுக்கு கம் பேக்(Come back) கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா, கருப்பு படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களைப் பகிர்ந்து, “என்னுடைய மேஜிகல் மே கூறியது: மற்றொரு வெற்றி, எல்லாம் கடவுள் நினைத்தது ” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா, மற்றொரு வெற்றி என்பது குறிப்பிட்டது, இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
த்ரிஷாவின் நீண்டகால நண்பர் விஜய்யின் கட்சியான தவெக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றது.
தற்போது, கருப்பு திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. இரண்டையும் குறிப்பிட்டு த்ரிஷா பதிவிட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Summary
A post shared by actress Trisha on her Instagram page has gone viral on the internet.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











