நடிகை ஓவியாவின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகை ஓவியா பிக்பாஸுக்குப் பின் 90 எம்எல் என்கிற படத்தில் நடித்தார். அப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. சினிமாவின் கணக்குகள் புரியாது என்பதுபோல், இப்போது மொத்தமாக மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார்.
சில நாள்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் ஓவியாவின் ஆபாச விடியோ என ஒரு விடியோ பகிரப்பட்டது. அந்த விடியோவில், பெண்ணின் கையில் டாட்டூ இருந்ததால் ஓவியாதான் என ரசிகர்கள் இந்தியளவில் அவரை வைரலாக்கியதுடன் அந்த விடியோ அதிகளவில் பரப்பப்பட்டது. இதுகுறித்து ஓவியா தரப்பிலிருந்து காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலிக்காக விஜய்யைக் கைது செய்ய வேண்டுமென கூறி விஜய் ரசிகர்களின் தாக்குதல்களுக்கும் ஆளானார்.
இந்த நிலையில், கடற்கரையில் மகிழ்ச்சியாக இருக்கும் விடியோ ஒன்றை நடிகை ஓவியா பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள், ஓவியாவின் ஆழகைப் புகழ்ந்து விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Actress Oviya's video has gone viral on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











