திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூட் மாஃபியாவை அம்பலப்படுத்த வேண்டும்: ஓவியா

ரூட் நிறுவனத்தைத் தாக்கிய ஓவியா...

News image

முதல்வர் விஜய், ஜெகதீஷ் பழனிச்சாமி, ஓவியா - dinamani

Updated On :14 மே 2026, 12:19 pm IST

நடிகை ஓவியா ரூட் தயாரிப்பு நிறுவனம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஓவியா பிக்பாஸுக்குப் பின் 90 எம்எல் என்கிற படத்தில் நடித்தார். அப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. சினிமாவின் கணக்குகள் புரியாது என்பதுபோல், இப்போது மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார்.

தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலிக்காக விஜய்யைக் கைது செய்ய வேண்டுமென கூறி விஜய் ரசிகர்களின் தாக்குதல்களுக்கும் ஆளானார்.

இந்த நிலையில், ஓவியா இன்ஸ்டாகிராமில், “ரூட் மாஃபியாவை அம்பலப்படுத்த வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் மேலாளரான ஜெகதீஷ் பழனிச்சாமி நடத்திவரும் தயாரிப்பு மற்றும் மேலாண்மை நிறுவனமான ரூட் பல நடிகர்களின் சினிமா ஒப்பந்தங்கள் மற்றும் புரமோஷன்களை நிர்வகிக்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. ஷேஷம் மைக்-இல் ஃபாதிமா, ரிவால்வர் ரீட்டா, மகாராஜா திரைப்படங்கள் மூலம் நேரடியாக தயாரிப்பிலும் இந்நிறுவனம் இறங்கியது.

ஓவியாவின் பதிவு..

ஓவியாவின் பதிவு..

ஆனால், அண்மை காலமாக ரூட் தமிழ் சினிமாவின் மாஃபியா போல் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. முக்கியமாக, திட்டமிட்டே சில நடிகர்களின் தொழில் வாழ்க்கையைக் கெடுப்பதாகவும் சிலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறியுள்ளனர். குறிப்பாக, நடிகை பிரியங்கா மோகன் இந்நிறுவனத்தின் பெயரைச் சொல்லாமல் தன்னைத் திட்டமிட்டுத் தாக்கியதாகக் கூறினார்.

இந்த நிலையில், நடிகை ஓவியாவும் குரல் கொடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக, முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பும் ஓவியா தன் கருத்தை தைரியமாகக் கூறியுள்ளார் என ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

Actress Oviya has posted an update regarding the production company 'Route'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.