அமெரிக்காவில் இருக்கும் ஹாலிவுட் நகரத்தில் இருந்த டால்பி திரையரங்கில் இருந்து ஆஸ்கர்ஸ் விருதுகள் 2029ல் விலகுகிறது. சமீபத்தில் 98ஆவது ஆஸ்கர் விருதுகள் அளிக்கப்பட்டது. 100ஆவது விருதுகள் வரை ஹாலிவுட்டிலேயே நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக டௌன்டவுன் லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கும் பீக்காக் திரையரங்கில் 101ஆவது ஆஸ்கர் விருதுகள் 2029 ஆம் ஆண்டு முதல் நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் 1929 முதல் வழங்கப்படுகின்றன. கடந்த 2002 முதல் ஹாலிவுட் நகரத்தில் இருந்த டால்பி திரையரங்கில் ஆஸ்கர் விருது விழாக்கள் நடைபெற்று வந்தன.
இதன் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் அதன் இடம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது 100ஆவது ஆஸ்கர் விருதுகள் வரை ஹாலிவுட்டிலேயே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக 101ஆவது ஆஸ்கர் விழா லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெறும். மேலும், கடந்த 50 ஆண்டுகளாக ஒளிப்பரப்பு உரிமையை ஏபிசியில் இருந்து யூடியூப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. புதியதாக விருது வழங்கப்படும் பீக்காக் திரையரங்கம் ஹாலிவுட்டில் இருந்து 14.5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
பீக்காக் திரையரங்கள் முந்தைய டால்பி திரையரங்கைவிட கூடுதல் எண்ணிக்கையிலான இருக்கைகளைக் கொண்டது. டால்பியில் 3,400 இருக்கைகள் இருக்க, பீக்காக் திரையரங்கில் 7,100 இருக்கைகள் இருக்குமென்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் பல்வேறு விடுதிகளில் ஆஸ்கர் விருதுகள் நடைபெற்று வந்தன. 1940க்கு மத்தியில் திரையரங்கிற்கு மாற்றப்பட்டன. 1968 - 1986 வரை லாஸ் ஏஞ்சலீஸ் ஓபராவில் நடைபெற்றன.
ஹாலிவுட்டுக்கு மாறும்வரை இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் கலிஃபோர்னியாவில் இருக்கும் சாண்ட்லெர் மற்றும் ஷிரைன் அரங்கத்தில் நடைபெற்றன. அடுத்த 10 ஆண்டுகளுக்கு லாஸ் ஏஞ்சலீஸில் பீக்காக் திரையரங்கில் ஆஸ்கர் விருதுகள் நடைபெறுமென ஏஇஜி உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
Summary
The Oscars are leaving Hollywood what is the reason.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மருதூா் மேலக்காலில் இருந்து செக்கால் ஓடை வழி சாத்தான்குளத்துக்கு தண்ணீா்: அதிகாரிகள் ஆய்வு

லிவர்பூல் அணியிலிருந்து விலகும் முகமது சாலா..! சோகத்தில் ரசிகர்கள்!

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



