மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லிவர்பூல் அணியிலிருந்து விலகும் முகமது சாலா..! சோகத்தில் ரசிகர்கள்!

லிவர்பூல் எப்ஃசி கால்பந்து அணியிலிருந்து விலகும் முகமது சாலா குறித்து...

News image

முகமது சாலா. - படம்: எக்ஸ் / பிரீமியர் லீக்.

Updated On :25 மார்ச் 2026, 10:08 am

லிவர்பூல் எப்ஃசி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா (33 வயது) இந்த சீசனில் முடிவில் அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் இவரை அணியில் இடம்பெற வைக்காமல் இருந்ததால் அவரது பேட்டிகள் அணியின் நிர்வாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

எகிப்து நாட்டைச் சேர்ந்த முகமது சாலா கடந்த 2017 முதல் லிவர்பூல் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணி முக்கியமான அணியாக இருந்து வருகிறது. கடந்த சீசனில் அந்த அணி கோப்பை வென்றதற்கு சாலா முக்கிய காரணமாக இருந்தார்.

லிவர்பூல் அணிக்காக 435 முறை விளையாடியுள்ள முகமது சாலா 255 கோல்கள், 119 அசிஸ்ட்ஸ் செய்து அசத்தியுள்ளார். இவரது பங்களிப்பில் ஒரு சாம்பியன்ஸ் லீக், 2 பிரீமியர் லீக், 2 லீக்ஸ் கோப்பை, 1 எப்ஃஏ கோப்பை, 1 கிளப் உலகக் கோப்பை வென்றுள்ளார்.

முகமது சாலா தனது சிறப்பான ஆட்டத்தினால் நான்கு முறை பிரீமியர் லீக்கின் கோல்டன் பூட் (தங்கக் காலணி) விருது வென்று அசத்தியுள்ளார்.

பாலஸ்தீனே பீலே எனப்படும் கால்பந்து வீரர் போரின்போது கொல்லப்பட்டதுக்கு முதல் வீரராக எதிர்ப்பு தெரிவித்தவர் முகமது சாலா என்பதும் கவனிக்கத்தக்கது. லிவர்பூல் அணியிலிருந்து விலகுவது குறித்து சாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

துரதிஷ்டவசமாக அந்த நாள் வந்துவிட்டது. இந்த கிளப், மக்கள் எல்லாம் என் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்பதை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. லிவர்பூல் வெறுமனே கால்பந்து கிளப் மட்டுமல்ல. அது ஒரு விருப்பம், வரலாறு, உத்வேகம். இதில் விளையாடாத ஒருவருக்கு அதை எப்படி புரியவைப்பது என எனக்குத் தெரியவில்லை என்றார்.

அடுத்ததாக, எந்த அணியில் விளையாடுவார் என்பதை முகமது சாலா தெரிவிக்காத நிலையில், லிவர்பூல் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகுந்த கவலையாகப் பதிவிட்டு வருகிறார்கள்.

Summary

Mohamed Salah to leave Liverpool at end of the season after 9 years with club.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.