மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து...

News image

திரையரங்கில் ஹேப்பி ராஜ் படக்குழுவினர். நடுவில் படத்தின் போஸ்டர். - படங்கள்: எக்ஸ் / ஜிவி பிரகாஷ் குமார்.

Updated On :27 மார்ச் 2026, 9:11 am

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் திரையரங்குகளில் இன்று (மார்ச் 27) வெளியாகியுள்ள ஹேப்பி ராஜ் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தத் திரைப்படம் தந்தை - மகனுக்கு உள்ள உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஹேப்பி ராஜ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

உறவுச்சிக்கல்களை நகைச்சுவை பாணியில் சொல்லும் இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வெற்றியை அனைத்து தந்தைகளுக்கும் சமர்ப்பிப்பதாக நடிகர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

திரையரங்கிற்குச் சென்ற ஜிவி பிரகாஷ் ரசிகர்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்று நெகிழ்ச்சியாக விடியோ வெளியிட்டுள்ளார்.

இயக்குநரைக் குறிப்பிட்டு, “நீ ஜெயிச்சிட்ட மரியா இளஞ்செழியன்” என ஜிவி பிரகாஷ் வாழ்த்தியுள்ளார். ரசிகர்களும் கடைசி அரை மணி நேரத்தில் கண் கலங்கியதாக சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Summary

Dedicated to Fathers! GV's 'Happy Raj' Receives a Warm Welcome!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.