மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?

முதல்முறையாக ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருது வென்றது குறித்து...

News image

ஆஸ்கர் விருது வென்ற ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ். - படம்: ஏபி

Updated On :16 மார்ச் 2026, 6:06 am

முதல்முறையாக ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஆஸ்கர் விருது வென்றது திரைத்துறையில் பேசுபொருளாகியுள்ளது.

ரையன் கூக்லர் இயக்கிய சின்னர்ஸ் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ் (Autumn Durald Arkapaw) ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருதை முதல்முறையாக பெற்று அசத்தியுள்ளார்.

சின்னர்ஸ் திரைப்படம் கடந்தாண்டு ஏப் 18ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் இரவில் எடுக்கப்பட்டு இருந்தாலும் மிகவும் அற்புதமாக எடுத்திருப்பார்.

குறிப்பாக, நாயகன் அவரது காதலியை சந்திக்கும் இடங்களும் பார்டி நடக்கும் இடங்களையும் அற்புதமாகப் படம்பிடித்திருப்பார்.

இந்தப் படத்தினை ஐமேக்ஸ் மற்றும் அல்ட்ரா பானவிஷன் 70 ஃபார்மட்டில் எடுத்திருப்பார். இந்தப் படத்திற்கான காமிராவின் எடை 65 பவுன்ட்ஸ் (29 கிலோ) என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் பிறந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ், ஒளிப்பதிவிற்கான பாடத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

முதல்முறையாக 2013ல் வெளியான பாலோ ஆல்டோ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். ரையன் கூக்ளரின் பிளாக் பாந்தர் படத்துக்கும் இவர் ஒளிப்பதிவு செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்ற விரும்பினாலும் சின்னர்ஸ் மாதிரியான கதைகள் கிடைத்தால் மட்டுமே பணியாற்றுவேன் என நேர்காணல் ஒன்றில் அர்க்காபாவ் கூறியுள்ளார்.

Summary

Autumn Cheyenne Durald Arkapaw is an American cinematographer work on the film Sinners, she became the first woman to win an Academy Award for Best Cinematography.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.