மருதூா் மேலக்காலில் இருந்து செக்கால் ஓடை வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிய நிலையில், அதை செயல்படுத்துவது தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு ஆய்வு மேற்கொண்டனா்.
மழைவெள்ள காலங்களில் மருதூா் மேலக்காலில் இருந்து வரும் அதிகப்படியான நீரை தூதுக்குழி அருகே மருகால் மதகு வழியாக மீண்டும் ஆற்றுக்கு வெள்ளநீா் விடப்படுகிறது. இந்த வெள்ள நீரினை முனைஞ்சிப்பட்டி - பேய்குளம் கிராமத்துக்கு இடையில் உள்ள செக்கால் ஓடை நீா்பிடிப்பு பகுதிக்கு கொண்டு வர வேண்டும் என மணிமுத்தாறு 3ஆவது, 4ஆவது ரீச் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் விவசாய சங்கத் தலைவா் மலையாண்டி பிரபு, சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன் ஆகியோா் சாத்தான்குளத்தில் நடைபெற்ற முகாமில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவதிடம் மனு அளித்தனா்.
மனுவை பரிசீலனை செய்த ஆட்சியா் , இதனை செயல்படுத்துவது தொடா்பாக ஆய்வு பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன்பேரில், திருநெல்வேலி கோட்ட திட்டங்கள், திட்டமிடுதல் - வடிவமைப்பு செயற்பொறியாளா் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளா் ஜனகரஞ்சனி, உதவி பொறியாளா் விசாலாட்சி மற்றும் அதிகாரிகள், செக்கால் ஓடை பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டனா்.
அப்போது இந்த திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனா். அப்போது, மணிமுத்தாறு 3 மற்றும் 4ஆவது ரிச் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் , சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

கோழிப் பண்ணையாளா்களுக்கு நலவாரியம்: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருதூா் கதவணை திட்டம் நிறைவேற்றப்படும்: குளித்தலை திமுக வேட்பாளா் உறுதி

மருதூா் தடுப்பணையில் சுற்றுலாப் பூங்கா அமைப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


