நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் புதிய சாதனையைச் செய்துள்ளது.
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியான நாளிலிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் பெரிய வெற்றிப்படமாகியுள்ளது.
மேலும், தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி வணிக ரீதியாகவும் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபகரமான படமாக மாறியுள்ளது. நடிகர் சூர்யாவின் திரைப்படங்களிலேயே இதுவே அதிக வசூலைச் செய்திருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சுவாரஸ்யமாக, தவெக கட்சியின் சென்னை மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் ரேவந்த் நடத்தி வரும் ரோகிணி திரையரங்கில் கருப்பு திரைப்படத்திற்காக மட்டும் இதுவரை ஒரு லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அந்த திரையரங்கில் 4 திரைகள் இருந்தாலும் ஒரு லட்சம் பேர் படத்தைப் பார்த்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய எண்ணிக்கையாகவெ பார்க்கப்படுகிறது. இந்த ஒரு திரையரங்கிலிருந்தே கருப்புக்கு சில கோடிகள் லாபமாக கிடைத்திருக்கின்றன.
இந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழகத்திலும் இதுவரை 1 கோடி டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாக படத்தின் விநியோகிஸ்தரான சக்தி பிலிம் ஃபேக்ட்ரி அறிவித்துள்ளது. இதனைத் தமிழ் திரைத்துறையின் மிகப்பெரிய வெற்றி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
actor suriya has set a new record
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









